Webdunia - Bharat's app for daily news and videos

Install App

400 ரன்கள் அடித்தும் தோல்வி அடைந்த நியூசிலாந்து.. டக்வொர்த் லீவிஸ் முறையில் பாகிஸ்தான் வெற்றி..!

Webdunia
சனி, 4 நவம்பர் 2023 (19:40 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அந்த அணி அபார பேட்டிங் காரணமாக 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 401 ரன்கள் எடுத்தது. ரச்சின் ரவீந்திரா சதமடித்தார். இந்த நிலையில் 402 என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடிக் கொண்டிருந்த நிலையில்  மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய நிலையில் பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 342 என்ற இலக்கு கொடுக்கப்பட்டது.

ஆனால் 25.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் பாகிஸ்தான் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 401 ரன்கள் எடுத்திருந்தும் நியூசிலாந்து அணியால் வெற்றி பெறவில்லை

இந்த நிலையில் இந்த போட்டியின் முடிவு காரணமாக  இலங்கை, நெதர்லாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் வெளியேற்றப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் 8 புள்ளிகளில் இருப்பதால் இந்த நான்கு அணிகளில் இரண்டு அணிகளும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

177 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. மழை வந்ததால் ஏற்பட்ட திருப்பம்..!

கடைசி 5 ஓவர்களில் பேயாட்டம் ஆடும் ரிங்கு சிங்… சீனியர் வீரர்களை ஓரம்கட்டி படைத்த சாதனை!

முதல் பந்தாக இருந்தாலும் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்வேன்.. ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கருத்து!

அதிரடி பதிலடி! 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments