Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன வேகம் தோனி!! அசந்து போன நியூசிலாந்து விக்கெட் கீப்பர் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2016 (10:47 IST)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 3 டெஸ்ட் போட்டிகளையும் முழுமையாக இந்தியா வென்றது.

 
முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
குறிப்பாக கோஹ்லி மற்றும் தோனியின் ஆட்டம் வெகுசிறப்பாக இருந்தது. இதில் தோனியின் விக்கெட் கீப்பிங்கை பார்த்து நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பரே அசந்து போனார்.
 
அமித் மிஸ்ரா வீசிய பந்தை நியூசிலாந்து அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் லுக் ரோன்சி தடுக்க முற்பட்டார். ஆனால் அது விக்கெட் கீப்பர் தோனியிடம் சென்றது. அடுத்து கண் இமைக்கும் நேரத்தில் தோனி ஸ்டம்பிங் செய்து அவுட் என முறையிட்டார்.
 
இதனால் மூன்றாவது நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டது. டி.வி ரீப்ளேவில் பார்க்கும் போது அது அவுட் என தெரியவந்தது. ஸ்டம்பிங் செய்யப்பட்ட நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் என்பதால் ஸ்டம்பிங்கை நம்ப முடியாமல் பெவிலியன் திரும்பினார். 
 
அங்கு அவர் தோனியின் ஸ்டம்பிங் திறமையை மீண்டும் மீண்டும் பார்த்து அசந்து போய் விட்டார்.

நான் ஒன்றும் பாலிவுட் நடிகர் இல்லை… விமர்சனம் குறித்து கம்பீர் விளக்கம்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இரண்டு குறைகள் உள்ளன… முன்னாள் வீரர் விமர்சனம்!

இவ்ளோ நாள் சொதப்புனது எல்லாம் வெறும் நடிப்பா?... முக்கியமான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற ஸ்டார்க்!

தவறுகளை விரைவாக சரிசெய்வோம்… தோல்விக்குப் பின்னர் பேசிய பேட் கம்மின்ஸ்!

நான்காவது முறையாக ஐபிஎல் பைனலில் கொல்கத்தா… கம்பீர் வந்த ராசிதான் போல!

அடுத்த கட்டுரையில்
Show comments