Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான டி-20 : இந்திய அணி அபார வெற்றி !

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (15:49 IST)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன.
 
இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன.
 
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று ஆக்லாந்தில் முதல் டி20 போட்டியில் மோதுகின்றன.
 
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, மன்ரோ -59, ராஸ் டெய்லர் -54, வில்லியம்சன் -5, கப்தில் -30 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 203 ஆக  உயர்த்தினர்.
 
இந்திய அணி தர்ப்பில் பும்ரா, சஹால் தூபே, ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 
 
இதை அடுத்து களமிறங்கிய  இந்திய அணி 19 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிறகு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்திய அணியில்  அதிகபட்சமாக ஸ்ரேயால் ஐயர் 58, ராகுல் 56 , விராட் கோலி 45 ரன்கள் எடுத்தனர்.
 
கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணிடம் தோற்று அரையிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments