Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து அசத்தல் பேட்டிங்....இந்தியா வெற்றி பெற 204 ரன்கள் இலக்கு !

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (14:16 IST)
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இந்தப் பயணத்தின் முதல் ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.
இந்த சுற்றுப் பயணத்தின்போது ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் ஆகியவற்றில் இரு அணிகளும் மோதுகின்றன.
 
இவை மட்டுமல்லாது ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் இரு அணிகளும் மோதுகின்றன.
 
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் இன்று ஆக்லாந்தில் முதல் டி20 போட்டியில் மோதுகின்றன.
 
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, மன்ரோ -59, ராஸ் டெய்லர் -54, வில்லியம்சன் -5, கப்தில் -30 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 203 ஆக  உயர்த்தினர்.
 
இந்திய அணி தர்ப்பில் பும்ரா, சஹால் தூபே, ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 
 
இனி அடுத்து களமிறங்கவுள்ள இந்திய அணி இந்த ஸ்கோரை சேஸ் எயுமான் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.
 
கடந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணிடம் தோற்று அரையிறுதியில் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி ‘ப்ளேயர் ஆஃப் தி மன்த்’ விருதைப் பெறும் பும்ரா!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் செல்லும் ரோஹித் ஷர்மா!

7 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்!

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments