Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக கிரிக்கெட் வீரரின் தாயார் மரணம் – ரசிகர்கள் அஞ்சலி!

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (13:58 IST)
தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான முருகன் அஸ்வினின் தாயார் ரத்த புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுழல்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வின் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி அதன் மூலம் இந்திய அணியிலும் சில போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் தமிழ் எழுத்தாளர் இரா முருகனின் மகனும் ஆவார்.

இந்நிலையில் முருகன் அஸ்வினின் தாயார் கிரிஜா ரத்தப்புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக எழுத்தாளர் முருகனின் சமூகவலைதளப் பக்கத்தில் ‘என் வாழ்க்கைத் துணைவி திருமதி கிரிஜா முருகன், ரத்தப் புற்றுநோயால் (Acute Myeloid Leukemia) பாதிக்கப்பட்டு டிசம்பர் 30, புதன்கிழமை பிற்பகல் சென்னையில் காலமானார். டிசம்பர் 31 வியாழனன்று இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. கிரிஜாவின் ஆன்மா சாந்தியடைய நண்பர்கள். அனைவரின் பிரார்த்தனைகளையும் வேண்டுகிறேன். ஓம் சாந்தி’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments