Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாததால் வாய்ப்பை இழந்த இந்திய வீரர்!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (14:00 IST)
தமிழகத்துக்காக விளையாடி வரும் முரளி விஜய் தடுப்பூசி போடாததால் சையத் அலி முஷ்டாக் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடர் இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அணியில் இடம்பெற வேண்டிய தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் இந்த தொடரில் இருந்து விலகினார். விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் இப்போது அவர் விளையாடாததற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளாததுதான் காரணம் என சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் மட்டுமே பயோ பபுள் வளையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் முரளி விஜய் இன்னும் ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லையாம். அதனால் அவரை தொடரில் சேர்க்கவில்லை என பிசிசிஐ தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

அடுத்த கட்டுரையில்
Show comments