Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி லீக்கில் ரூ.1 கோடிக்கு மேல் ஏலம் போன மோனு கோயத்

Webdunia
வியாழன், 31 மே 2018 (16:07 IST)
இந்தியாவில் நடைபெறும் புரோ கபடி லீக்கின் 6வது சீசனுக்கான வீரர்களின் ஏலத்தில் ரூ1½ கோடிக்கு ஏலம் போனார் மோனு கோயத்.
 
புரோ கபடி லீக் 6-வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், பெங்களூரு புல்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன.
 
இந்த அணிக்களுக்கான வீரர்களின் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அதிகப்பட்சமாக இந்திய வீரர் மோனு கோயத் அரியானா ஸ்டீலர்ஸ் அணிக்காக ரூ1.51 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியில் விளையாடுவதற்காக தீப்க் ஹூடா ரூ 1.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஈரான் வீரான பாசெல் அட்ராசாலியை மும்பை அணி ரூ. 1 கோடிக்கு வாங்கியது.
 
இந்த சீசனில் கலந்து கொள்ளும் 12 அணிகளில் 9 அணிகள் ஓட்டுமொத்தமாக 21 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதில் தமிழ் தலைவாஸ் அணியை சேர்ந்த அஜய் தாக்குர், சி.அருண், அமித் ஹுடா ஆகிய 3 பேரும் அடங்குவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments