Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மாதத்தை விட 6 நாட்கள் கடினமாக உள்ளது – மற்றொரு கிரிக்கெட் வீரர் புலம்பல்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (19:48 IST)
துபாயில் கொரோனாவுக்காக தனிமைப்படுத்திக் கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் ஏற்கனவே அரபு அமீரகம் சென்றடைந்துள்ளன. அங்கு வீரர்கள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீரர்கள் அனைவரும் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அங்கு தனிமைப் படுத்திக் கொள்வது பற்றி ஏற்கனவே அஸ்வின் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது மற்றொரு இந்திய வீரரான முகமது ஷமியின் இது குறித்து பேசியுள்ளார். அதில் ‘4 மாத ஊரடங்கு அனைவருக்கும் மிக கடுமையாக இருந்திருக்கும். நான் எனது வீட்டிலேயே பயிற்சி மற்றும் வேலைகளை செய்தேன். ஆனால் இப்போது துபாயில் இந்த 6 நாட்கள் 4 மாதங்களை விட கடினமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments