Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெர்ஸி நம்பர் செய்த மேஜிக்; அசத்திய குல்தீப் யாதவ்!

Webdunia
புதன், 16 மே 2018 (15:09 IST)
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

 
ஐபிஎல் 2018 தொடரின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்தில் அதிரடியாக தொடங்கிய இறுதியில் அமைதியாக ஆட்டத்தை முடித்தது. 
 
20 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் குவித்தது. இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். நேற்று குல்தீப் யாதாவ் ஜெர்ஸி நம்பரை மாற்றிக்கொண்டு களமிறங்கினார். ஜெர்ஸி நம்பர் மாற்றம் அவருக்கு சாதகமாக அமையுமா என்று பலரும் கேள்வி எழுப்பினர்.
 
ஆனால் ஜெர்ஸி நம்பர் மாற்றம் மேஜிக் செய்தது. இந்த சீசனில் இதுவரை விளையாடிய போட்டிகளில் சரியாக பந்துவீச குல்தீப் நேற்றைய போட்டியில் அசத்தினார். 
 
போட்டிக்கு பின் ராஜஸ்தான் அணியின் கோச் வார்னே உடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments