Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2018 ன் சிறந்த வீரர், கோஹ்லி ; 3 விருதுகள் வென்று சாதனை -ஐசிசி அறிவிப்பு

2018 ன் சிறந்த வீரர், கோஹ்லி ; 3 விருதுகள் வென்று சாதனை -ஐசிசி அறிவிப்பு
, செவ்வாய், 22 ஜனவரி 2019 (13:38 IST)
கடந்த ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் கோஹ்லி வென்றுள்ளார்.

ஐசிசி ஆண்டுதோறும் சர் கார்பீலட் சோபர்ஸ் பெயரில் சிறந்த வீரர்களுக்கான விருதை வழங்கி வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரர், ஒருநாள் வீரர் மற்றும் கிரிகெட்டர் ஆஃப் த இயர் ஆகிய மூன்று விருதினையும் இந்தியக் கேப்டன் கோஹ்லி வென்றுள்ளார். இந்த விருதுகள் மட்டுமல்லாது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கான கேப்டனாகவும் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதன் மூலம் ஒரு ஆண்டில் ஐசிசியின் 3 விருதுகளையும் பெற்ற முதல் பேட்ஸ்மேன் விராட் கோலி என்ற புதிய வரலாற்றைப் பெற்றார்.
webdunia

2018-ம் ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி 1,322 ரன்களைச் சேர்த்து சராசரி 55.08 ரன்கள் வைத்துள்ளார். 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1202 ரன்கள் சேர்த்து ,133.55 சராசரி வைத்துள்ளார்.
webdunia

இந்த விருதினைப் பெறுவதில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ரபடாவுக்கும் கோஹ்லிக்கும் இடையில் கடுமையானப் போட்டி இருந்தது. ஆனால் பெருவாரியான உறுப்பினர்கள் கோஹ்லிகே வாக்களித்தால் கோஹ்லிக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓய்வு எப்போது… அறிவித்தார்… விராட் கோஹ்லி !