Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தான் எங்கள் வெற்றியின் ரகசியம்: கோலி பெருமிதம்!!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2017 (12:59 IST)
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது இந்திய அணி.


 
 
கேப்டன் பதவி வகிக்கும் விராட் கோலி பல நேரங்களில் முன்னாள் கேப்டன் தோனியிடம் அறிவுரை கேட்பது வழக்கமான ஒன்றாக தான் இருக்கிறது.
 
இந்நிலையில், தோனியின் பங்களிப்பும் ஆதரவு மற்றும் அறிவுரைகளும் தான் எங்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து கோலி, கூறியதாவது தோனி கொடுத்த ஐடியாக்கள் பல நேரங்களில் சிறப்பாக பலன் தந்துள்ளது. அனுபவ வீரர்கள் அணியில் இருப்பது பலமே. முந்தைய போட்டியில் பார்ட்டைம் பவுலர்களை பயன்படுத்துவது குறித்து தோனியிடம் ஆலோசித்தேன். 
 
தோனி சற்றும் யோசிக்காமல் என்னையே பந்து வீச கூறினார். அதையும் செய்தேன். அப்போது ரன் ரேட் சற்று குறைய ஆரம்பித்தது.
 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கூட, ஃபீல்டரை ஸ்லிப்பில் நிறுத்துவதா வேண்டாமா, இந்த ஃபீல்டிங் செட்அப் திருப்தியாக உள்ளதா என்பது குறித்தெல்லாம் தோனியிடம் ஆலோசனை பெற்றேன் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments