Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி ஸ்கூப், புஜாரா போல்டு – ஆட்டத்தை மாற்றிய இரு பந்துகள்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (08:35 IST)
சிறப்பாக விளையாடி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய கேப்டன் கோஹ்லி 82 ரன்களில் அவுட் ஆனார்.

நேற்று மொல்போர்னில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை சேர்த்திருந்தது. புஜாரா 68 ரன்களோடும் கோஹ்லி 47 ரன்களோடும் களத்தில் இருந்தனர்.

தொடர்ந்து இன்று 2 ஆம் நாளை ஆடிய இந்திய அணி உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி சிறப்பாக விளையாடியது. புஜாரா சிறப்பாக விளையாடி தனது 17 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு களமிறக்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக கோஹ்லி மற்றும் புஜாராவை ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆவுட் ஆக்கி வெளியேற்றினர்,

சிறப்பாக விளையாடி சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த கோஹ்லி ஸ்டார்க் வீசிய பவுன்சரை தேவையில்லாமல் ஸ்கூப் செய்ய அது தேர்டு மேன் திசையில் இருந்த பிஞ்ச் கையில் தஞ்சம் புகுந்தது. இதனால் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் சிறிது நேரத்தில் புஜாராவும் கம்மின்ஸ் பந்தில் போல்டு ஆகி வெளியேறினார்.

தற்போது ரஹானே 5 ரன்களோடு ரோஹித் ஷர்மா அரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் விளையாடி வருகின்றனர். இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

வெற்றியே காணாத ராஜஸ்தான்.. இன்று சிஎஸ்கே ஜெயக்கடவா? பலிக்கடாவா? - CSK vs RR மோதல்!

ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments