Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் அசத்த ஐபிஎல் அனுபவம் உதவும்: ராகுல் நம்பிக்கை

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (19:14 IST)
ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அனுபவம் இந்திய அணியின் டாப் பினிஷராக உதவும் என்று கே.எல்.ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
ஐபிஎல் 2018 சீசனில் சீனியர் வீரர்கள் சொதப்பிட நிலையில் இளம்வீரர்கள் சிறப்பாக விளையாடி அசத்தினர். பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் எல்லா போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
ஐபிஎல் வரலாற்றில் 14 பந்துகளில் அதிவேத அரைசதம் அடித்து அசத்தினார். லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி 659 ரன்கள் குவித்தார். ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தொடர்ந்து இவருக்கு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் தொடரில் இடம்கிடைத்துள்ளது.
 
இந்நிலையில் கே.எல்.ராகுல் கூறியதாவது:-
 
மனது அமைதியான நிலையில் இருக்கும்போது சிறப்பான ஆட்டம் வெளிவரும். இதைத்தான் ஐபிஎல் தொடரில் நான் செய்தேன். அணிக்காக பேட்டியை பினிஷ் செய்வது கொடுக்க வேண்டும் என்பதில் என் கவனம் இருந்தது. 
 
ஒரு வீரராக அணிக்கு போட்டியை பினிஷ் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது அந்த சூழ்நிலையை வீரர்கள் விரும்புவார்கள். இந்த ஐபிஎல் தொடர் மனதளவில் மேம்பட எனக்கு உதவியாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

3வது டெஸ்ட்டில் களமிறங்கும் பும்ரா! வெளியேறுவது சிராஜா? ப்ரஷித் கிருஷ்ணாவா?

PPL 2! வேதாந்த் பரத்வாஜ் அபார ஆட்டம்! ஜெனித் யானம் ராயல்ஸ் த்ரில் வெற்றி

RCB வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார்… போலீஸார் வழக்குப் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments