Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாமல் துரத்திய அஸ்வின்; பஞ்சாப் அணி போராடி தோல்வி

Webdunia
சனி, 12 மே 2018 (19:45 IST)
கொல்கத்தா அணி கொடுத்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் பஞ்சாப் அணி போராடி தோல்வி அடைந்தது. 

 
கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. 
 
நரைன் மற்றும் கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினர். இதைத்தொடர்ந்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக ராகுல் அதிரடியாக விளையாடினார். 29 பந்துகளில் 66 ரன்கள் குவித்திருந்தபோது ஆட்டமிழந்தார். 
 
கெயில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய மாயனக் அகர்வால் டக் ஆவுட் ஆனார். கருண் நாயர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடினாலும் 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
கேப்டன் அஸ்வின் வெற்றி பெற முடியாது என்ற நிலையிலும் அதிரடியாக விளையாடி கடுமையாக போராடினார். அஸ்வின் 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேவலமான பேட்டிங்.. மைதானத்தை விட்டு வெளியேறும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

Power Playயில் மோசமான தொடக்கம்.. 20 டாட் பால்கள்.. 2 விக்கெட்டுக்கள்.. தலைநிமிராத சிஎஸ்கே..!

டாஸில் தோல்வி அடைந்த தோனி.. கொல்கத்தா எடுத்த முடிவு என்ன? ஆடும் 11 பேர்கள் யார் யார்?

ருத்துராஜுக்கு பதில் சி எஸ் கே அணியில் இணைவது யார்?... நான்கு பேர் லிஸ்ட்டில்!

துரோகி வறான் பாரு.. ப்ராவோ வந்தபோது தோனி சொன்ன அந்த வார்த்தை! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments