Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோவுக்கு வாழ்நாள் தடை!

Webdunia
புதன், 22 செப்டம்பர் 2021 (09:53 IST)
இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ஜார்வோ.

நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வீரர்களுக்கு இடையிலான ஸ்லெட்ஜிங் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஜார்வோ என்ற நபரும் கவனம் ஈர்த்துள்ளார். இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து மைதானத்துக்கு வந்து பேட் செய்வேன் என அடம்பிடித்தார். அப்போது அவரைக் காவலாளிகள் அங்கிருந்து அகற்றினர்.

அதேபோல மூன்றாவது டெஸ்டிலும் முழு கிட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வந்து பேட் செய்வேன் என மீண்டும் அடம்பிடித்தார். அப்போதும் காவலர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இந்நிலையில் நேற்று இந்திய அணி பந்து வீசிக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த அவர் தான் பந்துவீசுவேன் எனக் கூறி அடம்பிடித்துள்ளார். அப்போது விளையாடிக் கொண்டிருந்த பேர்ஸ்டோ மீதும் மோதினார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். ஜார்வோவின் தொல்லையால் போட்டி 5 நிமிடம் தடைபட்டது. 

இந்நிலையில் இப்போது ஜார்வோவுக்கு மைதானத்தில் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இது சம்மந்தமாக அவர் தனது யுடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments