Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர்த்ரோ ரன்கள் வேண்டாம் என சொன்னாரா ஸ்டோக்ஸ் ?– ஆண்டர்சன் புதுத்தகவல் !

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (09:58 IST)
உலகக்கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு ஓவர்த்ரோவாக சென்ற ரன்களை அவர் ஏற்கவில்லை என ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்த இன்னும் முடிந்தபாடில்லை. பென்ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்ற ஓவர்த்ரோ குறித்து இன்னமும் விவாதங்கள் நடந்து வருகின்றன. விதிகளின் படி அதற்கு 6 ரன்கள் கொடுத்திருக்கக் கூடாது 5 ரன்களே கொடுத்திருக்க வேண்டும் எனவும் ஸ்டோக்ஸை நான் ஸ்ட்ரைக்கர் இடத்தில்தான் நிறுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இது குறித்து புதுத்தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ‘ பேட்டில் பட்டு ஓவர்த்ரோ சென்ற ரன்கள் எங்களுக்கு வேண்டாம் என ஸ்டோக்ஸ் சென்று நடுவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் நடுவர்கள் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதனால் தான் ஸ்டோக்ஸ் தான் வாழ்நாள் முழுவதும் வில்லியம்ஸனிடம் மன்னிப்புக் கேட்டார்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோலி மட்டும் எங்க அணியில் இருந்திருந்தா நாங்க ஒரு கோப்பைய கூட மிஸ் பண்ணிருக்க மாட்டோம்… ஜாம்பவான் வீரர் கருத்து!

“இப்போது நான் வாங்கும் சம்பளமே நான் எதிர்பார்க்காதது…”… ரிங்கு சிங் நெகிழ்ச்சி!

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments