Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் போட்டியில் ஜடேஜா விளையாடுவது உறுதி: சிஎஸ்கே நிர்வாகி பேட்டி

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (17:53 IST)
ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஜடேஜா களமிறங்குவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்
 
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது தெரிந்ததே. அவர் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் தொடரின்போது காயமானார். இதனையடுத்து அவர் சிகிச்சை பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது அவர் முழுமையாக குணம் அடைந்து முழு தகுதி பெற்றுள்ளார் 
 
இந்த நிலையில் தற்போது அவர் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் நிர்வாகி ஒருவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’ஜடேஜா தற்போது முழு அளவில் போட்டிக்கு தயாராகி விட்டார் என்றும், பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறும் டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணியில் அவர் விளையாடுவார் என்றும் கூறியுள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பின் ஜடேஜாவின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா; சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சேவாக் பங்கேற்பு!

அவுட் ஆகி வெளியேறிய போது கிண்டல் செய்த ஆஸி ரசிகர்கள்… திரும்பி வந்து முறைத்த கோலி!

கோலியை க்ளவுன் என விமர்சித்து கட்டம் கட்டும் ஆஸி ஊடகங்கள்… கடுப்பான இந்திய ரசிகர்கள்!

ஆட்ட நேர முடிவில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… பரிதாப நிலையில் இந்திய அணி!

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments