Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஆவது முறையாக இறுதிபோட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

Webdunia
சனி, 23 மே 2015 (09:28 IST)
நேற்றைய தகுதி சுற்று ஆட்டத்தில், பெங்களூரு அணியை வீழ்த்தி 6 ஆவது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி.
 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று நடைபெற்ற  2 ஆவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை -  பெங்களூர் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி தங்களின் இன்னிங்சை தொடங்கியது. 
தொடக்கத்தில் கெய்லும், கோலியும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் கோலி 12 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் இணைந்த அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் 1 ரன்னில் எல்.பி.டபுள்யூ ஆகி பெரிதும் ஏமாற்றினார். பின்னர் கெய்லும் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்தது.
 
இதைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கிய தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். இதில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மித் 17 ரன்கள், டூபிளஸிஸ் 21 ரன்கள், புதுமாப்பிள்ளை ரெய்னா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஹசி 56 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இணைந்த பிராவோவும் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும் அஸ்வின்  அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இறுதியில் சென்னை அணி 19.5 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியை பதிவு செய்தது. இதனால் சென்னை அணி ஐபிஎல் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments