Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டியில் திணறும் இந்தியா அணி : பழிதீர்க்குமா ஆஸ்திரேலியா ...?

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (14:48 IST)
இன்று சிட்னியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட்  போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், தற்போது நிதானமாக ஆடி விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
மொத்தமுள்ள 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள்  எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் ஹேண்ட்ஸ்கோப் 73 ரன்களும், கவாஜா 59 ரன்களும் எடுத்தனர்.
 
இந்திய அணியின் குமார், குல்தீப் யாதவ் தலா இரு விக்கெட்டுகள் ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
இதனையடுத்து 289 ரன்கள் வெற்றிக்கு இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணி துவக்கத்தில் 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் பறிகொடுத்தனர்.
 
தவான், கோஹ்லி, அம்பதிராயுடு போன்றோர் அவுட்டான பின்னர் அடுத்து களம் இறங்கிய ரோஹித் சர்மா, தோனி ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டு நிதானமாக ஆடிவந்தனர்.
 
இந்நிலையில் ரோஹித் தன் 38 ஆவது அரைசதம் அடித்து விளையாடிய போது தோனி 51 ரன்களுக்கு அவுட்டானார்.
 
தற்போது தினேஷ் கார்த்தியுடன் இணைந்து ரோஹித் விளையாடி வருகின்றனர். வெற்றிக்கு 84 பந்துகளுக்கு 136 ரன்கள் தேவை என்பதால் ஆட்டம் பரபரப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

மூளையில் ரத்த உறைவு… மோசமான நிலையில் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

அஸ்வினை வெளியில் வைக்கக் காரணத்தை தேடினார்கள்… சுனில் கவாஸ்கர் காட்டம்!

பும்ராவின் பந்துவீச்சை ஏன் யாரும் கேள்வியெழுப்பவில்லை.. ஆஸி வர்ணனையாளர் குற்றச்சாட்டு!

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ரோஹித் ஷர்மா காயம் பற்றி வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments