Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு தென் ஆப்ரிக்காவில் காத்திருக்கும் சவால்!!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (19:38 IST)
இந்திய அணி இலங்கைக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை கைப்பற்றியது. அடுத்து தென் ஆப்பிரிக்காவில் விளையாடுகிறது. இந்திய அணி இன்று நள்ளிரவு தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறது. 
 
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 5 ஆம் தேதி 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
 
இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்காவுடனான போட்டி கடும் சவாலாக இருக்கும். தென் ஆப்பிரிக்காவில் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சதகமானது. எனவே, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவால் காத்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது கிடையாது. 
 
கேப்டன் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் தென் ஆப்பிரிக்கா செல்கிறார். இருவரும் அங்கு புத்தாண்டை கொண்டாடியதும் அனுஷ்கா நாடு திரும்பி விடுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments