Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் விராட் கோலிக்கு பக்கபலமாக இருப்போம் – களமிறங்கிய கங்குலி!

Webdunia
வியாழன், 24 அக்டோபர் 2019 (18:08 IST)
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்ட கங்குலி ‘கேப்டன் விராட் கோலிக்கு எல்லா வகையிலும் பக்கபலமாக இருப்போம்’ என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து நிர்வாகிகள் முறைப்படி பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் தலைவராக பொறுப்பேற்ற கங்குலி ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும். இந்த கிரிக்கெட் கவுன்சில் இளம் நிர்வாகிகளை கொண்ட படையாகும். இந்திய கிரிக்கெட் அனியை மேம்படுத்த கேப்டன் விராட் கோலி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பிசிசிஐ பக்க பலமாக இருந்து உதவிகள் செய்யும்’ என்று கூறியுள்ளார்.

தற்போதே இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில் பலவிதமான முன்னேற்றங்களை கண்டு வந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த இளைஞர் படை பல்வேறு மாற்றங்கள் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் 90ஸ் கிட்ஸின் ஆதர்ச நாயகன் கங்குலி தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில், கோலியோடு இணைந்த அவரது செயல்பாடுகள் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments