Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர பொதுக்குழு கூட்டம்: காரணம் என்ன?

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2016 (13:23 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் டெல்லியில் 15-ந் தேதி நடக்கிறது. இதில் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது.

 
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி பல்வேறு சிபாரிசுகளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. 
 
இந்த பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 
 
லோதா கமிட்டியின் பரிந்துரைகள் பலவற்றை மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதனை அமல்படுத்த முடியாது என்று கடந்த 7-ந் தேதி நடந்த விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் நிதி எதுவும் பட்டுவாடா செய்யக்கூடாது எனவும், ஏற்கனவே நிதியை பெற்ற மாநில கிரிக்கெட் சங்கங்கள் அதனை செலவிடக்கூடாது என உத்தரவிட்டது. 
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர சிறப்பு பொதுக்குழு கூட்டம் டெல்லியில் வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதில் லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவு குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசன் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்துவிட்டார்… கோலியைப் புகழ்ந்த ரவி சாஸ்திரி

ஐபிஎல் பவுலர்களுக்கு நான்கு ஓவர்களுக்கு மேல் வீசத் தெரியாது… ஷமியைப் புகழ்ந்த பெங்கால் அணிக் கேப்டன்!

யுவ்ராஜ் தந்தையின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர்!

ஓய்வை அறிவித்த நியுசிலாந்து அணியின் நட்சத்திர வீரர்!

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments