Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர்

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (07:40 IST)
ஹங்கேரியில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெள்ளிப் பதக்கம் வென்றார். 
 
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகரில் நடைபெற்று வந்தது. இதில் சிறப்பாக விளையாடி பல்வேறு கட்டங்களை தாண்டி வந்த இந்திய வீரர் பஜ்ரங் பூனியா நேற்றைய இறுதிப் போட்டியில் 65 கிலோ எடை பிரிவில் ஜப்பான் வீரர் டகுடோ ஒடோகுரோவை எதிர்கொண்டார்.
 
தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய பஜ்ரங், பின்னர் டகுடோவின் அதிரடியை தாக்குப் பிடிக்க முடியாமல் 16-9 என்ற கணக்கில் தோல்வியுற்றார். டகுடோ முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வெல்ல, இரண்டாம் இடம் பிடித்து இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ரஷ்யாவை சேர்ந்த வீரர் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments