Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியா அபார வெற்றி

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (07:50 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 3வது டெஸ்ட் போட்டியில் நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா வெற்றி பெறும் நிலையில் இருந்தது என்பது தெரிந்ததே.

369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 258 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் இரண்டு விக்கெட்டுக்கள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில் கம்மின்ஸ் மற்று, லியான் ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று ஆட்டம் தொடங்கிய சில மணி நேரத்தில் ஆஸ்திரேலிய அணி 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பும்ரா, ஜடேஜா தலா மூன்று விக்கெட்டுக்களையும், ஷமி, இஷாந்த் ஷர்மா தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி மாதம் 3ஆம் தேதி சிட்னியில் நடைபெறும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கான அணி அறிவிப்பு.. ஆஸி அணியில் இரண்டு மாற்றங்கள்!

மீண்டும் தொடக்க வீரராக ரோஹித்… கில் இடத்தில் ராகுல்… அதிரடி முடிவு!

நான் இந்திய அணிக்குக் கேப்டனாகவில்லை என்று வருத்தமில்லை… அஸ்வின் கருத்து!

அஸ்வினுக்குப் பதில் அணியில் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்பட்டது ஏன்?... ரோஹித் ஷர்மா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments