Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - மைக் ஹசி

Webdunia
புதன், 18 பிப்ரவரி 2015 (13:25 IST)
இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம் என்று ஆஸ்திரேலிய அணி வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணி உத்வேகம் நிறைந்ததாகும். அணியில் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக விளங்கும் காலம் விரைவில் வரும்.
 
இந்த உலக கோப்பையில் என்னுடையக் கருத்துப்படி மகேந்திர சிங் தோனி மற்றும் அவருடைய வீரர் படைகள் அரை இறுதிக்கு தகுதி பெறுவது கடினம். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும் என நினைக்கிறேன்.
 
உலக கோப்பையை வெல்ல ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான பல அணிகள் உள்ளன. இப்போதே எந்த அணி வெற்றி பெறும் என்று கணிப்பது முடியாத காரியமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

Show comments