இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணியின் முதல் இரண்டு விக்கெட் சீக்கிரமே விழுந்துவிட்டாலும் அதன் பிறகு ரச்சின் ரவீந்தரா மற்றும் மிட்சல் ஆகிய இருவரும் அபாரமாக விளையாடினர். ஒரு கட்டத்தில் இருவரும் 140 நாட்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் எடுத்த நிலையில் அதன்பின்னர் ரச்சின் ரவிந்திரா 75 ரன்களில் அவுட் ஆனார்.
இருப்பினும் மிட்சல் தொடர்ந்து நன்றாக விளையாடி வருகிறார் என்பது அவர் சதம் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன் வரை நியூசிலாந்து அணி 47 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது