Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி: மழையால் இன்று ஒத்திவைப்பு

Webdunia
புதன், 10 ஜூலை 2019 (06:15 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்று கொண்டிருந்த அரையிறுதி போட்டி மழை காரணமாக ரிசர்வ் டே எனப்படும் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
 
 
நேற்றைய அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை கடைசி வரை நிற்கவில்லை. இதனையடுத்து போட்டி இன்று ஒத்தி வைக்கப்பட்டதாக அம்பயர்கள் அறிவித்தனர்.
 
 
உலகக்கோப்பை போட்டியின் விதிப்படி அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் மழை பெய்தால் ஆட்டம் நின்ற இடத்தில் இருந்து அடுத்த நாளில் தொடங்கும். அதன்படி இன்று போட்டி 46.2வது ஓவரில் இருந்து தொடங்கும். 
 
 
இன்றும் மழை குறுக்கிட்டால் இந்தியாவுக்கு 20 ஓவர்களில் எடுக்க வேண்டிய ரன்கள் குறித்த இலக்கு அளிக்கப்படும். இன்று முழு அளவில் மழை பெய்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்
 
 
ஆனால் இன்றும் மான்செஸ்டரில் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவே வானிலை அறிக்கை கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments