Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஞ்சி டெஸ்ட்.. வெற்றியை நோக்கி இந்தியா அணி.. இன்றே ஆட்டம் முடிய வாய்ப்பு..!

Siva
திங்கள், 26 பிப்ரவரி 2024 (06:45 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றியை நெருங்கி விட்டதாக தெரிகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து  முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்சில் 353 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து இரண்டாவது இன்னிங்சில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு காரணமாக இங்கிலாந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனை அடுத்து இந்தியா வெற்றி பெற 192 ரன்கள் இலக்கு என்ற நிலையில் தற்போது நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது. நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்க உள்ள நிலையில் இந்தியா இன்னும் 152 ரன்கள் எடுத்தால் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்ற நிலையில் உள்ளது.

எனவே இன்றைய ஆட்டம் தொடங்கிய ஒரு சில மணி நேரத்தில் இந்தியா தனது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்று உள்ளதால், இந்த போட்டியையும் வென்றால் இந்திய அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

அடுத்த கட்டுரையில்
Show comments