Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு – ரோஹித்துக்கு இடம் கிடைக்குமா ?

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (14:11 IST)
இந்தியா வரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான இந்திய அணி இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது.

அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்க அணி  3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் விளையாடவுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதி முதல் டி20 ஆட்டம் தர்மசாலாவிலும், இரண்டாவது டி20 ஆட்டம் 18-ம் தேதி மொஹாலியிலும் 3-வது டி20 ஆட்டம் 22-ம்தேதி, பெங்களூருவிலும் நடைபெறவுள்ளன.. இதைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் முதல் டெஸ்ட் அக்டோபர் 2 முதல் 6-ம் தேதி வரையும், புனேவில் இரண்டாவது டெஸ்ட் 10 முதல் 14 வரையும், ராஞ்சியில் மூன்றாவது டெஸ்ட் 19 முதல் 23 வரையும் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. அதில் இந்திய முன்னணி பேட்ஸ்மேனான ரோஹித் ஷர்மாவுக்கு இடம்  கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடி வரும் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதனால் அவருக்குப் பதில் ரோஹித் ஷர்மாவை தொடக்க ஆட்டக்காரராக இறக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments