Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது இன்னிங்ஸ்ஸிலும் விக்கெட்டை இழந்த இந்தியா.. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

Mahendran
வெள்ளி, 18 அக்டோபர் 2024 (15:12 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே பெங்களூரில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா, இரண்டாவது இன்னிங்ஸிலும் ஒரு விக்கெட்டை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த 16ஆம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி தொடங்க இருந்த நிலையில், முதல் நாளில் மழை பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணிவழக்கமான 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
 
இதனை அடுத்து, நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 402 ரன்கள் குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவிந்தரா 134 ரன்கள் எடுத்திருந்தார். 
 
இதனை அடுத்து, இந்திய அணி 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. சற்றுமுன் வரை, இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.  கேப்டன் ரோகித் சர்மா அரை சதம் அடித்து விளையாடி வருகிறார். விராட் கோலி அவருடன் இணைந்து விளையாடி வரும் நிலையில், அவர் ஐந்து ரன்கள் எடுத்துள்ளார். 
 
இந்திய அணி இன்னும் 262 ரன்கள் பின்தங்கிய நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா? அதிரடியாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு சவாலை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்க்க ஒரு வட்டம்… மீண்டும் சி எஸ் கே அணியில் இணைந்தது குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் ‘நியு கிங்’ ஆகிவிட்டாரா ஜெயஸ்வால்?... பெர்த் டெஸ்ட்டில் செய்த சம்பவம்!

ஐபிஎல் முதல் நாள் ஏலம்.. 10 அணிகளும் வாங்கிய வீரர்களின் முழு விவரம்!

IPL Mega Auction: சுக்கிரன் உச்சத்தில்..! அதிக விலைக்கு ஏலம் போன ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்! இதுவரையிலான ஏல பட்டியல்!

The Greatest of all time.. சச்சின் சாதனையை முறியடித்த கோலி! ஒரு வருடம் கழித்து அடித்த பவர்ஃபுல் சதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments