18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

Siva
வியாழன், 19 ஜூன் 2025 (16:57 IST)
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது இந்தியாவுக்கு எப்போதுமே சவாலான ஒன்றாகவே இருந்துள்ளது. இதுவரை மூன்று இந்திய கேப்டன்கள் மட்டுமே இச்சாதனையை படைத்துள்ளனர்.
 
அஜித்ப்ரசாத் வடேகர் (1971): முதல் வரலாற்று வெற்றி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அஜித்ப்ரசாத் வடேகர் தான் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன். அவரது தலைமையில், இந்தியா 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை 1-0 என்ற கணக்கில் வென்று வரலாறு படைத்தது.
 
கபில் தேவ் (1986): இமாலய வெற்றி!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் கபில் தேவ், 1986 ஆம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு மற்றொரு தொடர் வெற்றியைப் பெற்றுத் தந்தார். அவரது தலைமையில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற வலுவான கணக்கில் வென்றது.
 
ராகுல் டிராவிட் (2007): அண்மைய வெற்றி!
இங்கிலாந்து மண்ணில் இந்தியா கடைசியாக டெஸ்ட் தொடரை வென்றது ராகுல் டிராவிட் தலைமையில் தான். 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. அதன்பின் 18 ஆண்டுகளாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
 
சமீபத்தில் 2021-2022 ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 எனச் சமன் செய்தது. இந்தத் தொடரின் முதல் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியும், ஐந்தாவது போட்டியில் ரோஹித் சர்மாவும் கேப்டன்களாக இருந்தனர். இந்த தொடரில் இந்தியா வெற்றி பெறவில்லை என்றாலும், சிறப்பான ஆட்டத்திற்காக பெரிதும் பாராட்டப்பட்டது.
 
இந்த நிலையில் நாளை தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றும் மீண்டும் சரித்திரத்தில் இடம்பிடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

பாலியல் புகாரில் சிக்கிய வீரரைத் தக்கவைத்து சர்ச்சையில் சிக்கிய RCB!

மேட்ச் முடிந்ததும் கழுத்து வலி சரியானது… மருத்துவமனையில் இருந்து திரும்பிய கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments