Webdunia - Bharat's app for daily news and videos

Install App

32 ரன்கள் முன்னிலையில் இந்தியா: ஆஸி.யின் ஆதிக்கம் தொடருமா?

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (12:10 IST)
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைப்பெற்று வருகின்றது. 


 
 
3 போட்டிகள் முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
 
4 வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
 
இதன் பிறகு களமிறங்கிய இந்தியாவுக்கு ராகுல் 60, புஜாரா 57, ரஹானே 46, அஸ்வின் 30 ரன்கள் எடுத்து வலுசேர்த்தனர். 
 
பின்னர் ஜடேஜா, சஹா ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்து இந்தியாவை முன்னிலை பெறசெய்தனர். ஜடேஜா அரைசதம் கடந்து 63 ரன்களும், சஹா 31 ரன்களும் எடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
 
அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணி 32 ரன்கள் முன்னிலை பெற்று ஆட்டமிழந்தது. 

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: DLS முறையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. நமீபியா ஏமாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments