Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்; இந்தியா அபார வெற்றி..!

wi vs ind
, புதன், 15 பிப்ரவரி 2023 (21:58 IST)
உலகக் கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் மேற்கிந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 
 
இன்றைய  போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 119 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
 
இந்திய அணியின் ரிச்சா கோஸ் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 44 ரன்கள் அடித்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து நான்கு புள்ளிகளுடன் குரூப் 2 பிரிவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உலகக்கோப்பை டி20: இந்திய அணிக்கு 119 ரன்கள் இலக்கு..!