Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND-ENG 2வது டெஸ்ட்; பந்தை சேதம்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்

Webdunia
திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (22:31 IST)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்தைச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5வது விக்கெட்டையும் சற்றுமுன் இழந்துள்ளது.

272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தற்போது இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் சொற்ப ரன்களில் அவுட் ஆனதை அடுத்து கேப்டன் ஜோரூட் மட்டும் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் கேப்டன் ரூட் சில நிமிடங்களுக்கு முன்னர் 33 ரன்களில் அவுட்டானார். இதனை அடுத்து தற்போது ஜாஸ் பட்லர் மற்றும் மொயின் அலி ஆகியோர் விளையாடி வருகின்றனர் இன்னும் கிட்டத்தட்ட 20 ஓவர்கள் இருக்கும் நிலையில் அதற்கு 5 விக்கெட்டுகளை இந்தியா வீழ்த்தி விட்டால் இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் இந்த போட்டியை டிரா செய்ய இங்கிலாந்து அணி கடுமையாக போராடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், 2 வது டெஸ்டில்  இந்திய அணி விளையாடியபோது,  33 வது ஓவரில் இங்கிலாந்து அணியின் ராபின்சன் பந்து வீசினார்.  பேட்ஸ்மேன் அப்பந்தை பெளலரை நோக்கி அடித்தார். அந்தப் பந்தை ராபின்சன் தனது காலால் நசுக்கிச் சேதப்படுத்தி எட்டி உதைத்தார்.

அதேபோல், பீல்ட் செய்து வரும் ரோரொ பர்ஸும் காலால் பந்தைச் சேதம் செய்வதற்காக தரைவில் அழுத்தினார், இதுகுறித்த காட்சிகள் தெளிவாக வீடியோவில் பதிவாகியிள்ளது. இது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவதற்காக சதி என விமர்சனம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments