Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 மணி வரை கெடு கொடுத்த அம்பயர்: அதற்கு பின் அரையிறுதி என்ன ஆகும்?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (19:52 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடைபெற்று கொண்டிருந்த நிலையில் திடிரென மழை குறுக்கிட்டது. மான்செஸ்டர் நேரப்படி சரியாக மதியம் 2 மணிக்கு மழை தொடங்கியது. தற்போது அங்கு மதியம் 3.20 ஆகின்றது. 
 
மான்செஸ்டரில் இன்னும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் மாலை 4 மணி வரை அம்பயர் கெடு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு பின் அம்பயர் தனது முடிவை அறிவிப்பார் என தெரிகிறது
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி அல்லது இறுதி போட்டியின்போது மழை பெய்தால் ரிசர்வ் டே' என்று கூறப்படும் அடுத்த நாளில் போட்டி நடைபெறும். அவ்வாறு நடைபெறும்போது முதலில் இருந்து போட்டி தொடங்காமல் முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கும். அதாவது இன்று 46.1 ஓவரில் போட்டி நிறுத்தப்பட்டதால் நாளை 46.2வது ஓவரில் இருந்து போட்டி தொடங்கும். 
 
ஆனால் நாளையும் மழை பெய்து போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டால் லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்துள்ள இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments