Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ரஜினிகாந்தை சந்திக்க ஆவலாக உள்ளேன்’ - பிவி சிந்து ஆர்வம்

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (18:01 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினியை ஒருநாள் சந்திக்க ஆவலோடு இருப்பதாக ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிவி சிந்து தெரிவித்துள்ளார்.
 

 
நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
 
ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த அவருக்கு பிரதமர் மோடி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு வீடு, கார், அரசு வேலை மற்றும் கோடிக்கணக்கில் பணமும் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சிந்துவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்தில் “வாழ்த்துக்கள் சிந்து.. நான் உங்களின் ரசிகனாக மாறிவிட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு சிந்துவும் பதில் நன்றியைத் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் ட்விட்டரில் ’உங்களது ரசிகனாக மாறிவிட்டேன்’ என்று குறிப்பிட்டது குறித்து கேள்வி எழுப்புகையில், ’அந்த நாள் எனக்கான நாளாக ஆகிவிட்டது’ என்றார்.
 
அவர் மேலும் கூறுகையில், ”அது ஒரு அற்புதமான தருணமாக இருந்தது. அவ்வாறு அவர் குறிப்பிட்டமைக்காக நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்க ஆவலாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments