Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபில் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இத்தனை கோடி செலவா ?

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (21:25 IST)
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 12 உதவியாளர்கள் மற்றும் ஒரு வீரருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதலை நீட்டித்து ஐபிஎல் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு நெகட்டின் ரிசல்ட் வந்துள்ளன.

இந்த ஐபிஎல் போட்டியை நேர்த்தியாகவும் பாதுக்காப்பாகவும் நடத்துவதற்காழ்க  சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரொனா பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ 10 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளது. இப்பரிசோதனையில் 70க்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

வயதை குறைத்து சொல்லி ஏமாற்றினாரா வைபவ் சூர்யவன்ஷி?... தந்தை ஆவேசம்!

ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே திடீரென இந்தியா திரும்பிய கம்பீர்!

அடுத்த கட்டுரையில்
Show comments