Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய புரோ கபடி போட்டிகள்: இன்று வெற்றி பெற்ற அணிகள்

Webdunia
ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (22:22 IST)
2019 ஆம் ஆண்டின் புரோ கபடி போட்டிகள் மூன்று வாரம் முடிவடைந்து நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் ஹரியானா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன 
 
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஹரியானா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே இரு அணிகளும் சரிசமமாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், ஹரியானா அணி 33 புள்ளிகளும் பெங்களூரு அணி 30 புள்ளிகளும் பெற்றதால் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் ஹரியானா அணி வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து நடைபெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளும் குஜராத்தில் 24 புள்ளிகளும் எடுத்ததால் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது 
 
இன்றைய இரண்டு போட்டிகளின் முடிவிற்குப் பின்னர் டெல்லி அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பெங்களூரு அணி 21 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் ஜெய்ப்பூர் அணி மற்றும் தமிழ்தலைவாஸ் அணிகள் 20 புள்ளிகளுடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒற்றை இலக்க ரன்னைத் தாண்ட மறுக்கும் ரோஹித் ஷர்மா… ஓப்பனாராக வந்தும் சொதப்பல்!

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

கோலியின் செயல் தேவையற்றது… ரவி சாஸ்திரி கண்டனம்!

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments