Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் இறங்குகிறாரா ஹர்பஜன் சிங்? அவரே அளித்த பதில்!

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (14:48 IST)
இந்திய அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராகப வலம் வந்தவர் ஹர்பஜன் சிங். கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால்  ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடி வந்தார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டாலும் ஒரு போட்டியில் கூட அவர் களமிறக்கப்படவில்லை.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். அதில், 23 வருட கால கிரிக்கெட் பயணம் அழகுடன்  நினைவுகூறத்தக்கதாகவும் மாற்றிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஓய்வுக்குப் பின்னர் அரசியலில் இறங்கப் போகிறீர்களா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அதில் ‘நான் அரசியல் மூலமாகவோ அல்லது வேறு வழியிலேயோ பஞ்சாப்புக்கு சேவை செய்வேன். எல்லா அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் எனக்கு தெரியும். நான் எந்த கட்சியில் சேருவேன் என்பதை முன் கூட்டியே அறிவிப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

ராகுல் பற்றி எல்லோரும் பேசி இருக்கணும்.. ஆனால்? – ஆஸி வீரர் கருத்து!

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

அடுத்த கட்டுரையில்
Show comments