Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா அதை ஒத்துக்கணும்…. இங்கிலாந்து முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
சனி, 7 மே 2022 (09:12 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்தர ஜடேஜா இந்த சீசனில் சி எஸ் கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி சிறப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. அணியின் முந்தைய கேப்டன் தோனிக்கு பதிலாக இந்த முறை கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

ஆனால் ஜடேஜா கேப்டன் ஆனது முதலாக அணி தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ஜடேஜாவாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை. இதனால் தான் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும், மீண்டும் தோனியே கேப்டன் பதவியை வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அடுத்த ஆண்டோ அல்லது தோனியின் ஓய்வுக்குப் பின்னோ சென்னை அணியை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பின்னர் ஜடேஜாவுக்கு மீண்டும் வாய்ப்புக் கொடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் ஜடேஜாவின் கேப்டன்சி குறித்து “அவர் தனக்கு கேப்டன்சி ஒத்துவராது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சி எஸ் கே ப்ளேயர் என்றால் அவர் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்படுவார்.. ஆனால்? – ரெய்னா வேதனை!

ஏலத்தின்போது வீரர்களை தேர்வு செய்வதில் தவறு செய்துவிட்டோம்: சிஎஸ்கே பயிற்சியாளர்..!

சி எஸ் கே அணியில் அடுத்த சீசனில் 70 சதவீதம் பேர் நீக்கப்படுவார்கள்.. முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

எங்களின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம்… தோனி ஓபன் டாக்!

‘அர்ஜுனை மட்டும் அவரிடம் அனுப்புங்கள்… கெய்ல் போல வருவார்’ – யோக்ராஜ் சிங் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments