Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் காலம் முடிந்துவிட்டது – கவாஸ்கர் ஆலோசனை !

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (14:08 IST)
இந்திய அணியில் தோனியின் காலம் முடிந்துவிட்டது, இனி அவருக்குப் பதிலாக புதிய விக்கெட் கீப்பரை உருவாக்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தோனிக்குப் பிறகு புதிய விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை உருவாக்க இந்திய அணி திட்டமிட்டு அவருக்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதிரடியான ஆட்டத்துக்குப் பெயர் போன ரிஷப் பண்ட் சில மோசமான ஷாட்களால் ஆட்டமிழந்து சொதப்பி வருவது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் தோனியை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என குரல்கள் எழுந்துள்ள வேளையில் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் ‘ தோனியின் காலம் முடிந்துவிட்டது. இனி அவர் இடத்தில் யாரைக் கொண்டு வருவது என்பது குறித்துதான் யோசிக்க வேண்டும். என்னுடைய கருத்து அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு ரிஷப் பந்தை தயார் செய்ய வேண்டும். அவர் தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒருவேளை அவர் தவறும் பட்சத்தில் அவருக்குப் பதில் சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யலாம். தோனி இந்திய அணிக்கு ஏராளமான பங்களிப்பினை செய்துள்ளார். அவர் அணியில் இருந்து வலுக்கட்டாயமாக அனுப்பப்படுவதற்கு பதில் அவராகவே சென்றுவிடுவார் என நம்புகிறேன்.’ என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தேர்வாளர் இல்லை… ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தக் கேள்விக்கு கம்பீர் காட்டமான பதில்!

வர்ணனையாளர்களுக்கு அறிவே இல்லை: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆவேசம்..!

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!

ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை தலைகுணிய வைத்துவிட்டார்… அஸ்வின் கோபம்!

அடுத்த கட்டுரையில்
Show comments