Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியும், ரோஹித்தும் இருப்பதால்தான் கோஹ்லி சிறப்பாக செயல்படுகிறார் – கம்பீர் கருத்து !

Webdunia
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:15 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் அணியில் ரோஹித்தும் தோனியும் இருப்பதால்தான் கோலி சிறந்த கேப்டனாக செயல்படுகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது ’ கேப்டனாக கோஹ்லி செல்ல வேண்டிய தூரம் உள்ளது. கோலி இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையில் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் அவர் தன்னை நிரூபிக்க இன்னும் நீண்டதூரம் செல்லவேண்டும். கோலி தற்போது ஒரு நாள் தொடர்களில் சிறந்த கேப்டனாக இருக்கிறார் அவர் ரோஹித் ஷர்மா மற்றும் தோனி போன்ற சிறந்த வீரர்களைப் பெற்றிருக்கிறார். உங்களுக்கு ஒத்துழைக்காத வீரர்கள் அணியில் இருக்கும்போதுதான் உங்கள் தலைமைப் பண்பு கவனிக்கப்படும். தோனி மற்றும் ரோஹித் ஐபிஎல் தொடர்களில் என்ன செய்து இருக்கிறார்கள் என்பதை ஆர்.சி.பி. அணியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

300 ரன்களை கடந்த ஆஸ்திரேலிய அணி.. முதல் நாள் ஆட்ட முடிவில் ஸ்கோர் விவரம்..!

ஆஸ்திரேலிய வீரருடன் மோதல்: விராட் கோலிக்கு 20% அபராதம்..!

தோனியப் பாத்தே பத்து வருஷம் இருக்கும்… மீண்டும் சி எஸ் கேவுக்கு செல்வது குறித்து அஸ்வின்!

அறிமுக வீரர் கோன்ஸ்டாண்டை சீண்டிய கோலி… அனல் பறந்த தருணம்!

என் கிரிக்கெட் வாழ்க்கையில் நடக்காத ஆசை இதுதான்… அஸ்வின் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments