Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பிறந்தநாள் அன்று கம்பீர் செய்த சர்ச்சை விஷயம்!

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (10:41 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகவும் புகழ்பெற்றவர். ரசிகர்களால் தல தோனி என செல்லமாக அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி தற்போது இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஐபிஎல்லில் தொடர்ந்து ஆடி வருகிறார். இந்நிலையில் நேற்று அவரின் அருமை பெருமைகளை புகழ்ந்து பேசி ரசிகர்கள் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் என பகிர்ந்து தள்ளினர்.

இந்நிலையில் கவுதம் கம்பீர் நேற்று தனது சமுகவலைதளப் பக்கத்தில் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் போதான தனது புகைப்படத்தை வெளியிட்டார். ஏற்கனவே இறுதிப்போட்டியில் கம்பீர் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடினாலும், தோனி கடைசி நேரத்தில் இறங்கி அதிரடியாக விளையாடி மேன் ஆஃப் தி மேட்ச் விருதைப் பெற்றுக்கொண்டார் என்ற விமர்சனங்கள் உள்ளன. அதை சுட்டிக்காட்டும் விதமாகவே தோனி பிறந்தநாள் அன்று கம்பீர் தனது புகைப்படத்தை மாற்றியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சிஎஸ்கே அணியில் ‘சுட்டி குழந்தை’ சாம் கரண்: ரூ. 2.4 கோடிக்கு ஏலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியல்… மீண்டும் முதலிடத்துக்கு சென்ற இந்தியா!

கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!

என்னை அவர்தான் வழிநடத்தினார்… ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்தியா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments