Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி- அஷ்வின் மோதல்? ரனகளமாகும் கிரிக்கெட் களம்!!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (11:57 IST)
சாம்பியன்ஸ் டிராபி போட்டி துவங்கியது முதல் இந்திய அணியில் ஏதேனும் சர்ச்சை இருந்துக்கொண்டே உள்ளது. தற்போது கோலி- அஷ்வின் இடையே மோதல் உள்ளதாக கூறப்படுகிறது.


 
 
இந்திய அணி பயிர்ச்சியாளர் அனில் கும்ளே மற்றும் கோலிக்கும் இடையே கருந்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்த பஞ்சாயத்து கங்குலி வரை சென்றதாகவும் கூறப்பட்டது. இதனால் தான் கும்ளேவின் பதவி காலம் நீடிக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியானது.
 
அடுத்தது, இந்தியா- பாகிஸ்தான் மோதிய போட்டியில் தோனிக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா களமிறக்கப்பட்டது சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது கோலி- அஷ்வின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறந்த பந்துவீச்சாளரான அஸ்வினை விட்டு விட்டு ரவீந்திர ஜடேஜாவை விராத் கோஹ்லி தேர்வு செய்தார். இதற்கு அஷ்வின்- கோலி மோதலே காரணம் என கூறப்படுகிறது.
 
ஆனால் கோலி எங்களுக்குல் எந்த மோதலும் இல்லை. இது வெறும் வதந்தி என தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அவர் கூறியதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அஷ்வின் இடம் பெறாதது நிச்சயம் அவரை விட எனக்குத்தான் அதிக வருத்தம். ஆனால் அணியின் தேவை, கட்டமைப்பு குறித்து அவர் புரிந்து கொண்டிருப்பது எனக்கு ஆறுதல் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments