Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சவுதி அரேபியாவில் உலகக்கோப்பை FIFA கால்பந்து போட்டி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Prasanth Karthick
வியாழன், 12 டிசம்பர் 2024 (11:34 IST)

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் அடுத்தடுத்த போட்டிகள் எந்த நாடுகளில் நடைபெறும் என்பதை ஃபிபா அறிவித்துள்ளது.

 

 

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற கால்பந்து போட்டி ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டிகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாட்டில் நடத்தப்படுகின்றன. சில போட்டிகளை இரண்டு, மூன்று நாடுகள் இணைந்து நடத்துவதும் உண்டு.

 

முந்தைய ஃபிபா கால்பந்து போட்டிகள் கத்தாரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து இனி வரும் ஆண்டுகளில் ஃபிபா உலகக்கோப்பை போட்டிகள் எந்த நாடுகளில் நடத்தப்படும் என விவாதிக்கப்பட்டது. பல நாடுகளும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன.

 

இந்நிலையில் அடுத்து வரும் 2026ம் ஆண்டில் நடைபெற உள்ள 23வது ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மூன்று நாடுகளும் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டிகளில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.
 

ALSO READ: தனுஷ் இயக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 

2030ம் ஆண்டில் நடைபெறும் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதன்முதலில் 1930ம் ஆண்டில் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடங்கப்பட்ட நிலையில் 2030ம் ஆண்டு ஃபிபாவின் நூற்றாண்டாகும். அதனால் 1930ல் போட்டி தொடங்கிய உருகுவே நாட்டு கால்பந்து அணிக்கு நேரடி வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும் அர்ஜெண்டினா, பராகுவே நாட்டு அணிகளும் நேரடி வாய்ப்பை பெறுகின்றன.

 

2034ம் ஆண்டில் நடைபெற உள்ள ஃபிபா உலகக்கோப்பையை நடத்துவதற்கு எந்த நாடுகளும் ஆர்வம் தெரிவிக்காத நிலையில் சவுதி அரேபியா மட்டும் ஆர்வம் தெரிவித்தது. இதனால் ஏக மனதாக சவுதி அரேபியாவிற்கு ஃபிபா உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடு, தங்கள் அணியை தகுதிச் சுற்று அல்லாமல் நேரடியாக ஆட்டத்திற்கு கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் உலகக்கோப்பை FIFA கால்பந்து போட்டி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பும்ரா மிகக் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார்… சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட போட்டிகளின் வரிசையில் RCB vs CSK போட்டி!

நாம் பார்த்த சிறந்த வீரர்களில் கோலி ஒருவர்… மனம் திறந்து பாராட்டிய கபில் தேவ்!

மூன்றாவது டெஸ்ட்டுக்காக பிரிஸ்பேன் சென்ற இந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments