Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்கஷனில் இருந்து மீண்டு நாடு திரும்பும் டூ பிளஸ்சி!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (12:19 IST)
தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான பாஃப் டு பிளசீஸ் இப்போது பாகிஸ்தான் பிரிமீயர் லீக்கில் விளையாடி வருகிறார்.

கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட பாகிஸ்தான் ப்ரிமியர் லீக் இப்போது அபுதாபியில் நடந்து வருகிறது. இந்நிலையில் இதில் கலந்துகொண்டு பாப் டு பிளசிஸ் பீல்டிங்கின்போது சக வீரரான முகமது ஹஸ்னைனுடன் கடுமையாக மோதிக் கொண்டார். இதனால் அவருக்கு தலையில் கடுமையான அடிபட்டது. மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்.

அதையடுத்து இப்போது தேறிவரும் அவர் டிவிட்டரில் ‘பிராத்தனை செய்த அனைவருக்கும் நன்றி. எனக்கு தலையில் கன்கஷன் ஏற்பட்டு சிறிது நேரம் நினைவாற்றலை இழந்தேன். இப்போது தேறி வருகிறேன்’ எனக் கூறியுள்ளார். முழுவதுமாக குணமடைந்த அவர் இப்போது பி எஸ் எல் தொடரில் இருந்து விலகீ நாடு திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியிடம் பேசியே பத்து ஆண்டுகள் ஆகிறது… ஹர்பஜன் சிங் பகிர்ந்த தகவல்!

பிரித்வி ஷாவின் நெருங்கிய நண்பர்கள் இதைதான் செய்யவேண்டும்… கெவின் பீட்டர்சன் அறிவுரை!

காலில் கட்டுடன் காணப்பட்ட கோலி… பயிற்சியின் போது காயமா?

சச்சின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… செய்வாரா?

இந்தியாவுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரரின் ஆசை!

அடுத்த கட்டுரையில்
Show comments