Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்த்தா அணியின் கேப்டன் பதவி சிக்கலில்… தினேஷ் கார்த்திக்குப் பதிலாக இவரா?

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (11:55 IST)
கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்திக்கைத் தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக இயான் மோர்கனை நியமிக்க ஷாருக் கான் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

கொல்கத்தா அணி வலிமையான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களைக் கொண்டுள்ளது. ஆனாலும் அந்த அணி வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் திறமையின்மை என்றே சொல்லப்படுகிறது. பேட்டிங் வரிசையை வலுப்படுத்தாமலும் மாற்றி மாற்றி வீரர்களை இறக்குவதும், பவுலர்களை திறம்பட கையாளாமலும் அவர் உள்ளார் என சொல்லப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல் தனிப்பட்ட முறையிலும் ஒரு பேட்ஸ்மேனாக அவர் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்கவில்லை. இதனால் அணியின் வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஷாருக் கான் ஆகியோருக்கு தினேஷ் கார்த்திக் மேல் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில் அவரைத் தூக்கிவிட்டு இயான் மோர்கனை கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments