Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் நாளிலும் ஆதிக்கம் செலுத்தும் இங்கிலாந்து – இந்திய பவுலர்கள் திணறல்!

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (11:29 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  முதல் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி 3 சுழல்பந்து வீச்சாளர்களோடு களமிறங்கியுள்ளது.

 டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்கார ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுக்க, அஸ்வின் பந்தில் ரோரி பர்ன்ஸ் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த  டேனியல் லாரன்ஸை பூம்ரா ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழக்க செய்தார். இதனால் இந்தியாவின் ஆதிக்கம் வந்தது போல இருந்தது.

ஆனால் அதன் பின்னர் வந்த ஜோ ரூட்டும் தொடக்க ஆட்டக்காரர் சிப்ளியும் விக்கெட்களை இழக்காமல் ஆடினர், சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். சிப்ளே முதல் நாளின் கடைசி பந்தில் 87 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்தார்.

இந்நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணி மேற்கொண்டு விக்கெட்களை இழக்காமல் ஆடிவருகிறது. ஜோ ரூட் 151 ரன்களோடும், பென் ஸ்டோக்ஸ் 50 ரன்களோடும் தற்போது களத்தில் உள்ளனர். இங்கிலாந்து 3 விக்கெட்களை இழந்து 344 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

அடுத்த கட்டுரையில்
Show comments