Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களை சாதாரணமாக எண்ணாதீர்கள்- ஆஸ்..பயிற்சியாளர் அட்வைஸ்

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (17:06 IST)
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் இந்தியர்களைச் சாதாரணமாக எண்ணாதீர்கள் எனத் தன் அணியினருக்கு அட்வைஸ் செய்துள்ளார் .

இன்று பிரிஸ்பேனில் நடந்து முடிந்த பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை இரண்டாவது முறையாக வென்றுள்ளது. மேலும் 32 ஆண்டுகளாக பிரிஸ்பென் காபா மைதானத்தில் தோல்வி அடையாத ஆஸ்திரேலியாவை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட், சுப்மன் கில்,உள்ளிட்டோர் மிக முக்கியமானக் காரணமாக அமைந்தனர்.

மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளின் நான்காவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி மேட்ச் வின்னராக ஜொலித்தார் ரிஷப் பண்ட்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை  வென்ற இந்திய அணிக்கு கண்ணுப்படும் அளவுகு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகள் குவிந்துவருகிறது.

இந்நிலையில், இது வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்பதால் ஒட்டுமொத்த இந்தியர்களும் இதைக் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் இந்தியர்களைச் சாதாரணமாக எண்ணாதீர்கள் எனத் தன் அணியினருக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இத்தொடர் முதலாய் எதையுமே சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதைக் கற்றுக்கொண்டோம். இந்தியர்களைக் குறைத்து மதிப்பிடக்கூடாது. 150கோடி மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியர்களில் மிகச்சிறந்த 11 வீரரகளுடன் நீங்கள் களமிறங்கி அவர்களுடன் விளையாடுவது என்பது கடினம் தான் என்று கூறியுள்ளார்.

இப்போட்டிக்கு முன் ரிக்கி பாண்ட்டிங் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு டிரா செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 ஓவரில் டெஸ்ட் மேட்ச் விளையாடுவது எப்படி? கற்றுக் கொடுத்த CSK! - கடுப்பான ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

டாஸ் வென்ற டெல்லி கேப்டன். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த டெல்லி..!

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments