Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.என்.பி.எல்: கோவை கொடுத்த இமாலய இலக்கை அசால்ட்டாக அடித்த திண்டுக்கல்

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (23:32 IST)
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டி தற்போது நடந்து வரும் நிலையில் இன்று கோவை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 185 ரன்கள் எடுத்தது. ஷாருக்கான் 86 ரன்களும், அக்கி ஸ்ரீநாத் 54 ரன்களும், ரோஹித் 26 ரன்களும் எடுத்தனர்.
 
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி 17.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 190 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சதுர்வேத் 72 ரன்களும், ஜெகதீசன் 66 ரன்களும் அனிருத் 25 ரன்களும் எடுத்தனர். 
 
இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இன்று காரைக்குடி அணியும் காஞ்சிபுரம் அணியும் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

ஐபிஎல் மீண்டும் தொடங்கினாலும், மழை தொடங்கவிடவில்லை.. RCB - KKR போட்டி ரத்து

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments